Gold Price Today: தங்கம் விலை அதிரடி உயர்வு.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. சென்னையில் ஒரு சவரன் ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சனிக்கிழமை குறைந்து இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 அதிகரித்து உள்ளது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 4 மாதங்களாகவே பெரிய அளவில் உச்சம் தொடாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரமும் பாதி நாட்கள் உயர்ந்தும், பாதி நாட்கள் குறைந்தும் என பெரிய அளவில் விலை மாறாமல் இருந்து வருகிறது.

தங்கம் விலை
நம் நாட்டில், தங்கத்தை நகைகளாக மட்டும் பார்க்காமல் அதனை ஒரு முதலீடாகவும் பார்த்து வருகின்றனர். பெண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் சரி, குழந்தைகள் பிறந்தாலும் சரி தங்க நகைகளை வாங்கி அணிவித்து மகிழ்ந்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் ஆபரணமாக மட்டும் இன்றி முக்கிய நேரத்தில் பணத் தேவைக்கும் தங்கம் சிறந்த முதலீடாக இருந்து வருவதால் தங்கம் வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் ஒரு சவரன் இருந்த ரேட்டுக்கு இப்போது அதில் கால் வாசி கூட வாங்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் ஒன்றரை ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1.20 ஆயிரம் என்ற விலையை தாண்டியது.
வாரத்தின் முதல் நாளே உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தங்கம் விலை சிறிது சிறிதாக குறைய தொடங்கியது. ஈரான் - அமெரிக்கா போர் ஆரம்பித்ததில் இருந்து தங்கம் விலை சரியத் தொடங்கியது. மார்ச் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரேட் ரூ.1,26,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகும் தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் குஷியடைந்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலை மாற்றமில்லை. இன்று வாரத்தின் தொடக்க நாள் என்பதால் தங்கம் விலை சரிவுடன் தொடங்குமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தங்கம் விலை பெரிய ஷாக் கொடுத்துள்ளது. வார முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை ரேட்
அதன்படி இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் சென்னையில் வெள்ளி விலை எந்த வித மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000 (இன்று)
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.


Click it and Unblock the Notifications
