Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!
சென்னை: தங்கம் விலை காலையில் குறைந்து இருந்த நிலையில் மாலையில் அதிகரித்துள்ளது. காலையில் பெயருக்கு ரூ.480 குறைந்துவிட்டு மாலையில் ஒரு சவரன் ரூ.1,360 அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது சுமார் 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன் தினமும் ரூ.1840 என்ற அளவில் உயர்ந்து இருந்ததால் இன்று விலை எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்றும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம் விலை நடப்பு ஆண்டு தொடக்கத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் இனி தங்க நகை வாங்குவது எட்டாக்கனியாக மாறிவிடுமோ என பலரும் அச்சப்பட்டனர். ஜனவரி மாதம் தான் அப்படி என்றால் பிப்ரவரியில் மேலும் உயர்ந்து ஷாக் கொடுத்தது.

மளமளவென குறைந்த தங்கம் விலை
பிப்ரவரி மாத பாதில் 1.25 லட்சம் வரை தொட்டது. இதன் பின்னர் தங்கம் விலை குறையவே குறையாது என நினைத்த நிலையில், திடீரென தங்கம் விலை சரியத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் (மார்ச்) 1 ஆம் தேதி ரூ.1,26,200 என்று இருந்தது. இதன் பின்னர் மளமளவென தங்கம் விலை சரியத் தொடங்கியது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும் தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. தொடர்ந்து நாளுக்கு நாள் சரிந்து வந்த தங்கம் விலையால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 23 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,03,600 என்ற அளவுக்கு சரிந்தது. 23 நாட்களுக்குள் தங்கம் விலை அப்படியே சுமார் 20 ஆயிரம் அளவுக்கு குறைந்தது.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
இன்னும் தங்கம் விலை சரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றங்கள் காரணமாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் குறைந்து வருவதால் வரும் வாரங்களில் தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 சதவீதம் குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நேற்று முன் தினம் தங்க விலை ஒரு கிராம் சென்னையில் ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
மாலையில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலையில் ரூ.640 குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியிருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் தான் மாலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை காலையில் ரூ.480 குறைந்து இருந்த நிலையில் தற்போது ரூ.1,360 அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,10,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.170 அதிகரித்து ரூ.13,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கம் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. வெள்ளி விலையும் தங்கத்தை போலவே குறைந்து இருந்தது. நேற்று முன் தினம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் அதே விலையே நீடித்தது.இந்த நிலையில் இன்று காலையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் மாலையில் தங்கத்தை போல வெள்ளியும் அதிகரித்துள்ளது. இதன்படி மாலையில் ரூ.5 அதிகரித்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை நிலவரம்:
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (இன்று மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (இன்று காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications