தாறுமாறாக தவிக்க வைக்கும் தங்கம்! சனிக்கிழமை அதுவுமா சர்ருனு ஏறிருச்சே! வாங்கலாமா? வேண்டாமா?
சென்னை: கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில் இறுதி வாரம் மற்றும் நவம்பர் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்றே ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து உன் 90,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் விலை உயர்ந்து 11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விளையில் மாற்றமின்றி கிராமுக்கு 165 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது. சில நாட்களில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பலரும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே சமயம் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது.

ஆனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தாழ்வாக அமைந்து வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் மாதத்துக்கு முன்பாக, கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது.
தங்கம் விலை
காலை, மாலை என இரு வேளைகளிலும் விலை அதிகரித்தது. இதனால் நகை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் தங்க விலை இப்படியாக மாறுவது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. அப்போது 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.11,320 ஆனது. அதேபோல் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.90,560 வரை சென்றது. இந்த திடீர் உயர்வால் பலர் தங்கம் வாங்குவதை தள்ளிப்போட்டனர்.
தங்கம் விலை குறைவு
ஆனால் நேற்று (நவம்பர் 7) தங்கம் விலை திடீரென குறைந்து நகை பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்தது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.11,270க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.90,160க்கு விற்பனை செய்யப்பட்டது. 18 காரட் தங்கம் விலைவும் குறைந்தது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.9,400 ஆனது. அதேபோல் ஒரு சவரன் ரூ.360 குறைந்து ரூ.75,200 ஆனது. நேற்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வெள்ளி ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் இன்றைய விலை
தங்க விலை கடந்த சில வாரங்களாக உலக சந்தை காரணங்களால் பெரும் ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் டாலர் மதிப்பு, அமெரிக்க பொருளாதார தரவுகள், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் போன்றவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன.முதலீட்டாளர்கள் தற்போது பங்குச் சந்தை மாற்றங்களால் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்கள். இதனால் தங்கம் மீண்டும் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது. அதேசமயம் இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று அல்லது அடுத்த சில நாட்களில் தங்கம் விலை சிறிய அளவில் உயர வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
தங்கம் விலை குறையுமா?
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்றே ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து உன் 90,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் விலை உயர்ந்து 11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விளையில் மாற்றமின்றி கிராமுக்கு 165 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று காலை விலை எப்படி இருந்தாலும், மாலையும் மாற்றம் இருக்கக் கூடும் என்பதால் வாடிக்கையாளர்கள் இன்னும் காத்திருக்கும் மனநிலையில் தான் உள்ளனர் என்கின்றனர் நகை வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications