Today Gold rate: திடீரென இடியை இறக்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடியாக உயர்வு.. நகை பிரியர்கள் ஷாக்!
சென்னை: திடீரென உச்சத்துக்கு சென்ற தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வந்தது. ஒரு சவரன் ரூ.74 ஆயிரம் வரை சென்ற தங்கம் விலை தற்போது அதிரடியாக சரிந்து வந்தது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்றும் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை எப்படி இருக்கும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இடியை இறக்கும் விதமாக தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.840 அதிகரித்துள்ளது.
தங்கம், தங்க நகைகள் மீது எப்போதுமே தனி மதிப்பு மக்களிடையே உள்ளது. விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் மக்களிடையே அதிகரித்து வருகிறதே தவிர ஒருபோதும் குறைவது இல்லை. தங்க நகை அணிகலண்களாக மட்டும் இன்றி சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இதற்கு தனி மதிப்பு உள்ளது.

ஜெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை
நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் சென்றது. கடந்த ஆண்டு தங்கம் வாங்கியவர்கள் எல்லாம் நல்ல வேளை இப்பவே வாங்கிவிட்டோம் என நிம்மதிபெரு மூச்சு விட வைக்கும் வகையில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட வரி விதிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஆகியவை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு இதுவே மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை கொடுத்தது. இருந்தாலும் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை இருந்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே வருவது நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்து வருகிறது.
இன்று அதிரடியாக உயர்ந்தது
ஆனால் தங்கம் விலை கடந்த மாத துவக்கத்தில் இருந்து ஏறி இறங்கி வருகிறது. திடீரென உயர்ந்து அதிர்ச்சி கொடுப்பதும் சட்டென விலை வீழ்ந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதும் என மாறி மாறி போக்கு காட்டி வந்தது. ஆனால் அதன்பிறகு கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை பெரிதாக மாற்றம் இல்லாமல், குறைந்தபடியே வந்தது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிறது.
கடந்த வாரம் 22 ஆம் தேதி 73,880க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. 10 நாட்களுக்குள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ. 71,440க்கு விற்பனை ஆன நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 71,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது.
இன்றைய ரேட் என்ன?
தங்கம் விலை இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. இதனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூரூ. 72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ. 9,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,320 (நேற்று)
29.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440
28.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440
27.06.2025 - ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications