Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate today: மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.400 உயர்வு! நகை பிரியர்களுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை சரிந்த நிலையில் மீண்டும் இன்று உயர்வை நோக்கித் திரும்பி உள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை ஆகிறது. 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.13,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சம் தொட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஆண்டு இறுதியில் சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டது. இது தங்க நகை பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. அதற்கேற்ப இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

gold price gold

தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் தை முதல் நாளில் (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்தது. பொங்கல் அன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1,06,320க்கும், ஒரு கிராம் ரூ.13,290க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (ஜனவரி 16) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 480 குறைந்து 13,230 ரூபாயாகக் குறைந்திருந்தது. அதேபோல, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ,இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து இன்று 1,06,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை

17.01.2026 (இன்று) - ஒரு சவரன் ரூ.1,06,240

16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320

14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960

11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+