Gold rate today: இன்றைக்கும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. வரலாற்றில் புது உச்சம்.. கதி கலங்கும் நகை பிரியர்கள்
சென்னை: தங்கம் விலை (Gold rate) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புது உச்சம் தொட்டு உள்ளது. வாரத்தின் முதல் நாளான நேற்று காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை கதி கலங்க வைத்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து உள்ளது.
தங்கம் விலை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதிரடியாக விலை குறையுமா? என நகை பிரியர்கள் ஏங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஜெட் வேகத்தில் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து வருகிறது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன
காலையில் ஒருமுறை ஏறுகிறது என்றால் மாலையில் ஒருமுறை ஏறி நகை பிரியர்களை கதி கலங்க வைக்கிறது. இப்படி விலையேறினால் இனி தங்கம் என்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறுமோ என்ற அச்சம் கூட நகை பிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்கா நடத்தும் வர்த்தக போர் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் நகர தொடங்கியுள்ளனர். அதாவது, பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடானது அதிகரித்துள்ளது.
ஜெட் வேகத்தில் உயருகிறது
தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த மாதம் 6-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த விலையே புதிய உச்சமாக இருந்த நிலையில், தொடர்ந்து விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.
அடுத்த மூன்று நாட்களில் அதாவது 9-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.81 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 1-ஆம் தேதி ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை தொடர்ந்து மேல்நோக்கியே நிற்காமல் சென்றுக்கொண்டிருக்கிறது.
வரலாற்றில் இதுவரை இல்லாத புது உச்சம்
கடந்த 4-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.10,950-க்கும், சவரன் ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதிரடியாக ரூ.110 அதிகரித்து கிராம் ரூ.11,060-க்கும், சவரன் ரூ.880 அதிகரித்து ரூ.88,480-க்கும் தங்கம் விற்பனையானது. பின்னர் மாலையும் கூடியது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை கடந்து, சவரன் ரூ.89 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்றைய ரேட் என்ன?
இந்த நிலையில், இன்றாவது தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. ஆனால் இன்றும் வழக்கம் போலவே தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.75 அதிகரித்து ஒருகிராம் ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று இருமுறை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்றும் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒரு சவரன் 90 ஆயிரத்தை நெருங்கிவிட்டதால் நகை பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
வெள்ளி விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600 (இன்று)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று காலை)
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.












Click it and Unblock the Notifications