தங்கம் விலை தாறுமாறாகப் போகுது.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் அமெரிக்கா? இனி தான் மார்க்கெட்டில் பூகம்பம்!
நியூயார்க்: உலக சந்தைகளில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தாழ்வைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி (US Fed) டிசம்பரில் வட்டியை குறைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உலக பொருளாதாரமும், தங்க சந்தையையும் நேரடியாக உலுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தங்கம் வரும் நாட்களில் தொடர்ந்தும் மாற்றத்துடன் இயங்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் டிசம்பர் மாத டெலிவரிக்கான தங்க வர்த்தகம் 0.5% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,079.5 என முடிந்தது. உலக வர்த்தகத்தில் சில நல்ல முன்னேற்றங்கள் தெரிந்தாலும், டிசம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பதற்கான சாத்தியம் குறைந்து வருகிறது.
மேலும், கடந்த காலங்களில் சர்வில் இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது வலுவாக இருப்பது தங்க விலையை அதிகரிக்க செய்கின்ற முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால் வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் கணிக்கப்படுகிறது.

இதைக்குறித்து நியூயார்க் Fed தலைவர் ஜான் வில்லியம்ஸ் கூறிய கருத்துகள் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. "வட்டி விகிதத்தை விரைவில் குறைத்தாலும், பணவீக்க இலக்கை பாதிக்க வாய்ப்பு இல்லை" என்று அவர் தெரிவித்தார். இந்த ஒரு வரிச் சொல்லே தங்க முதலீட்டாளர்களுக்கு ஊக்கமாக இருந்ததாக Kitco Metals நிறுவனத்தின் நிபுணர் ஜிம் வைகாஃப் கூறியுள்ளார். இதேவேளை, வர்த்தகர்கள் முன்பு 40% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என நினைத்த வட்டி குறைப்பை, தற்போது 74% சாத்தியம் என மதிப்பிடுகின்றனர். அதாவது சந்தை முழுவதும் டிசம்பரில் வட்டி குறைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவின் தாமதமாக வெளியான வேலைவாய்ப்பு அறிக்கையும் பொருளாதரத்தில் ஒரு நிலையற்ற தன்மையையே காட்டியது. அக்டோபர் மாதத்தில் non-farm payrolls 1,19,000 உயர்ந்தது. இது முன்னதாகவே கணிக்கப்பட்ட 50,000-ஐ விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலை இழப்பு விகிதம் நான்கு வருடங்களில் அதிகமான நிலைக்கு அமெரிக்காவில் உயர்ந்தது. இந்த முரண்பாடான தரவுகள் தங்க சந்தையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.வட்டி குறைப்பு சூழலில் வட்டி வருவாய் இல்லாத தங்கம் முதலீட்டாளர்களுக்கு அதிக ஆதரவு பெறுகிறது என்பது வர்த்தக உலகின் சாதாரண நடைமுறையே.
ஆனால், இதே நேரத்தில், சில Fed அதிகாரிகள் இன்னும் கடுமையான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். "வட்டி விகிதம் இப்போது மாற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை," என டல்லஸ் Fed தலைவர் லோரீ லோகன் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க பங்கு சந்தையும் கண்காணிக்கப்படுகிறது. பங்கு சந்தை இன்றும் அதிகமாக உயர்ந்தால், அதிக அபாயத்தை ஏற்கும் மனநிலை உருவாகும்; இதனால் தங்க விலை கீழே போகும் சாத்தியமும் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது












Click it and Unblock the Notifications