குடிகாரன் கூட ஸ்டெடியா இருப்பான்! இப்படி தள்ளாடுதே தங்கம்! வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்கள் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை திடீரென வீழ்ச்சி கண்டு முதலீட்டாளர்களை கலங்க வைத்திருந்தன. கடந்த மூன்று வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விலை குறைந்ததால் உலகளாவிய தங்க சந்தையில் ஒரு பதட்ட நிலை உருவானது. ஆனால், புதன்கிழமை நிலைமை மெல்ல மாறியது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகித முடிவை அறிவிக்க இருப்பதால், அதனை முன்னிட்டு தங்க-வெள்ளி விலை மீண்டும் சிறிய அளவில் உயரும் போக்கு காணப்படும் நிலையில், இப்போது தங்கம் வாங்கலாமா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உலக அளவில் பல்வேறு சூழல்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஜனவரி மாதத்தில் 60 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்த தங்கத்தின் விலை சில மாதங்களிலேயே 95 ஆயிரம் ரூபாயை தொட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில் 90 ஆயிரம் ரூபாய்க்கு கீழே செல்லுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் சென்னை உட்பட இந்திய தங்க வர்த்தக மையங்களில், தங்கம் விலை நேற்று வர்த்தக தொடக்கத்தின் போது சற்றே உயர்வு கண்டது.

Gold Gold Price trade

தங்கம் விலை

நேற்றைய நாளின் முடிவில் 10 கிராம் தங்கம் ரூ.1,21,160 வரை உயர்ந்தது. அதேபோல் வெள்ளியும் மீண்டு, கிலோ ஒன்றுக்கு ரூ.1,46,952 என முடிந்தது. சில நாட்க்களுக்கு முன்பு வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்திருந்த நிலையில் இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு சிறிய நம்பிக்கை கொடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடந்த பெரிய சரிவு காரணமாக, செவ்வாய்க் காலை வர்த்தகமும் பலவீனமாகத் தொடங்கியது.

சந்தை மாற்றம்

ஆனால், புதன்கிழமை மீண்டும் தங்கத்தின் விலை இயல்பு நிலைக்கு திரும்பியது. டாலர் மதிப்பு குறைந்ததும், அமெரிக்க பத்திர புலன் வருமானம் (bond yield) 4% க்குக் கீழ் சரிந்ததும் தங்கம் வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உயர்வின் முக்கிய காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு. வட்டி குறைந்தால் வங்கியில் பணத்தை வைப்பதை விட, மக்கள் தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு திரும்புவார்கள் என்பது தான்.

தங்க முதலீடு ஆலோசனை

உலக பொருளாதாரத்தில் அசாதாரண நிலை நீடிக்கையில், தங்கம் இன்னும் பாதுகாப்பான சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் விலை குறைந்தவுடன் வாங்கும் போக்கு மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், இது மிகப் பெரிய உயர்வின் தொடக்கம் என சொல்ல முடியுமா? என்கிற கேள்விக்கு நிபுணர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பு வெளிவரும் வரை சந்தை முழுமையான போக்கில் தான் செல்லும் என்பது சாத்தியமில்லை. அதுவரை விலை உயர்வு, சரிவு என மாறி மாறி வரும் வாய்ப்பு உள்ளது.

பொருளாதார நிபுணர் கருத்து

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற முதலீட்டாளர்களின் கேள்விக்கு தற்போது விலை குறையும் தருணங்களில் மெதுவாக வாங்க ஆரம்பிக்கலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால் அதிகம் உயர்ந்த உடனே விரைந்து வாங்க வேண்டாம். நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடுத்த சில வாரங்களில் சந்தையை கவனித்து அதற்கேற்றார் போல் முடிவெடுக்க வேண்டும். கடந்த வாரம் வரை தங்கம் விலை உயந்தது. இந்த வாரம் திடீரென சரிவு, அதற்குப் பிறகு மீண்டும் உயர்வு என சந்தை இன்னும் நிலையான இடத்தை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

தங்கம் வாங்கலாமா?

ஆனாலும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இன்னும் நம்பகத்தன்மை கொண்ட முதலீடுகளாகவே இருக்கின்றன. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைக்கப்படும் என்ற நம்பிக்கை உறுதியாகும் போது தங்கம் மீண்டும் மேலே செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. தங்கம்-வெள்ளி விலை இந்த வாரம் வரை சரிந்த நிலையில் இப்போது மெல்ல மீண்டு வருகிறது. அவசரம் இல்லாமல், சந்தை குறித்த புரிதலுடன் விலை குறையும் போது தங்கம் வாங்கும் பாணியே தற்போது பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+