தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்?
சென்னை: உலக அரசியல் சூழலில் போர் பதற்றம் அதிகரிக்கும் போதெல்லாம், அதன் நேரடி தாக்கமாக தங்கம் விலை உயர்வதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். போர் சூழல்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதி அதிகமாக வாங்குவதால், விலை ஏற்றம் காண்பது இயல்பாக இருந்தது. ஆனால், சமீபத்தில் ஈரான் மீது இஸ்றேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்திய பின்னரும், தங்கம் விலை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காமல், மாறாக சற்றே சரிவை நோக்கி நகர்ந்துள்ளது. போர் நடக்கும்போது தங்கம் விலை ஏன் ஏறவில்லை?' என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே இயல்பாகவே எழுந்துள்ளது.
இந்த மாற்றத்துக்கான பின்னணியைப் ஆராய்ந்து பார்த்தால், தற்போதைய உலக பொருளாதார சூழல் மிகப் பெரிய காரணமாக இருக்கிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்ததன் விளைவாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
தங்கம் விலை சரிவு
பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில், மத்திய வங்கிகள் உடனடியாக வட்டி விகிதத்தை குறைப்பதில்லை. மாறாக, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பே அதிகம். குறிப்பாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவுகள் உலக சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி விகிதம் அதிகரித்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட பாண்டுகள், வங்கி டெபாசிட்கள் போன்ற நிலையான வருமானம் தரும் முதலீடுகளுக்கு மாறுவார்கள். இதனால் தங்கத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு குறைகிறது.
தங்கம் விலை ஏன் ஏறவில்லை
இதற்கு மேலாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதும் தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. டாலர் வலுப்பெறும் போது, மற்ற நாணயங்களை பயன்படுத்தி தங்கம் வாங்குவது அதிக செலவாகிவிடுகிறது. இதனால் உலகளவில் தங்கத்தின் தேவையே குறைகிறது. தேவையே குறைந்துவிட்டால், விலையும் இயல்பாக குறையும். மேலும், கடந்த சில மாதங்களில் தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டிருந்தது.
ப்ராஃபிட் புக்கிங்
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்ய தங்கத்தை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த 'ப்ராஃபிட் புக்கிங்' போக்கும் விலையை கீழ்நோக்கி தள்ளியுள்ளது. இந்த அனைத்து காரணிகளின் ஒருங்கிணைந்த தாக்கமாக, தற்போது தங்கம் விலை பெரிய அளவில் ஏற்றமோ, சரிவோ இல்லாமல் ஒரு குறுகிய வரம்புக்குள் தான் நகர்ந்து வருகிறது. சென்னையில் மார்ச் 17 நிலவரப்படி 10 கிராம் தங்கம் ரூ.1,59,820க்கு விற்பனையாகி வருகிறது. சமீபத்திய உச்சத்திலிருந்து சில ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருப்பதும் இந்த போக்கை உறுதிப்படுத்துகிறது.
தங்கம் விலை
இதன் மூலம் ஒரு முக்கியமான மாற்றம் தெளிவாக தெரிகிறது. முன்னாள் காலங்களில் புவிசார் அரசியல் பதற்றங்கள் தங்கம் விலையை நிர்ணயித்திருந்தாலும், தற்போது உலக சந்தைகள் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மத்திய வங்கிகளின் முடிவுகளையே அதிகமாக கவனிக்கின்றன. அதனால் தான், போர் சூழல் பற்றி எரிந்தாலும் தங்கம் விலை தகிக்காமல் உள்ளது. தற்போதைய சூழலில் தங்கம் இன்னும் பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், அதன் விலை ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயிப்பது இனி போர் மட்டும் அல்ல, உலக பொருளாதாரத்தின் பல அடுக்குகள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications