தேன் கூட்டில் கல்லெறிந்த ட்ரம்ப்.. GOLD மார்க்கெட்டில் திடீர் BOOM! வெள்ளி விலை பிச்சுகிட்டு போகும்!
நியூயார்க்: வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்துள்ளது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா தலைநகர் காரகஸில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த இராணுவ பதற்றம் உலக சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் உயரக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதாக வெளியாகிய தகவல்கள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துகளான தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளது.

வெனிசுலா மீது தாக்குதல்
இதன் விளைவாக தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 4,550 (இந்திய மதிப்பில் ரூ.409565.75) அமெரிக்க டாலர் வரை உயர்ந்து, சாதனை அளவை எட்டியுள்ளது. உலகளாவிய பதற்றம் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு தங்க விலை உயர்ந்த நிலையில் தான் தொடரும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். வெள்ளி விலையும் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது. தற்போது அது அவுன்ஸுக்கு 83.75 டாலர் என உயரும் நிலையில் உள்ளது.
தங்கம் விலை உயர்வு
தொழில்துறைக்கும், பாதுகாப்பு முதலீட்டுக்கும் பயன்படுத்தப்படும் உலோகமான வெள்ளிக்கும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளி சந்தை மேலும் வேகமெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இராணுவ பதற்றம் கச்சா எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா தான் உலக எண்ணெய் உற்பத்தி வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலால் அதன் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 65 டாலர் வரை உயரலாம் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முன்னர் அமெரிக்கா கரீபியன் கடற்கரைக்கு போர் கப்பல்களை அனுப்பி எண்ணெய் கப்பல்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்தச் செயல்பாடுகள் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
உலக பொருளாதார பதற்றம்
இந்த ஏற்றுமதி உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 1 சதவீதம் இடத்தைப் பிடிக்கிறது. இந்த பதற்றத்தின் தாக்கம் இந்திய சந்தையிலும் தெரிந்துள்ளது. மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில் தங்க விலை 10 கிராமுக்கு ரூ.1,40,465 என்ற சரித்திர சாதனையை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் தங்கத்தின் உள்நாட்டு விலையை மேலும் உயர்த்தியுள்ளது.
உலக சந்தை அதிர்ச்சி
இதே நேரத்தில், WTI கச்சா எண்ணெய் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 57.4 டாலர் அளவிலும், பிரெண்ட் எண்ணெய் 2025 இறுதியில் 60 டாலர் அளவிலும் வர்த்தகம் செய்து வந்தது. புதிய போர் அபாயம் நிலவுவதால் சந்தையில் ஒரு நாள் விலை மாற்றமே கூட அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளதார நிபுணர்கள்
மொத்தத்தில், தற்போதைய நிலவரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச அளவில் 2026 இறுதிக்குள் 5,000 டாலரை எட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெனிசுலாவில் மேற்கு நாடுகளுக்கு சாதகமான ஆட்சி அமைந்தால், எதிர்காலத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து சந்தை நிலைமை மாறும் வாய்ப்பும் உள்ளது என சொல்கின்றனர் பொருளதார நிபுணர்கள்.
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications