உல்லாசமாக இருக்கலாம் வாங்க.. ஆசையோடு போன பைனான்சியருக்கு நேர்ந்த கதி.. நிர்வாணமாக்கி மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை பைனான்ஸ் அதிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). இவர் பைனான்ஸ் அதிபர். கடந்த ஜூன் மாதம் செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். தனது பெயரை 'கவிதா' என்று அறிமுகம் செய்து கொண்டார்.

the-gangs-tripping-a-financier-and-trhreatening-him-to-extort-rs-50-lakh-in-sivaganga

தனது விவரங்களை வழங்கிய அந்த பெண் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி கடந்த ஜூன் 9ம் தேதி வடிவேலிடமிருந்து ஜிபே மூலமாக ரூ.4,500 வாங்கினார்.

அதன்பிறகு மீண்டும் செல்போனில் அவ்வப்போது பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரைக்குடி வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை காரைக்குடிக்கு வரவழைத்த அந்த பெண், தனிமையில் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆசையோடு சென்ற வடிவேலுவிற்கு அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த வீட்டிற்குள் சிலர் மறைந்திருந்தனர். அவர்களை அங்கே மறைந்திருக்க வைத்தது அந்த பெண் தான் என்பதும், அவர்கள் அனைவரும் ஒரே கும்பல் என்பதும் தெரியவந்தது. இதனால் வடிவேல் அதிர்ச்சியில் உறைந்து போனார். என்ன செய்வது என்பது பற்றி யோசிப்பதற்குள் அந்த கும்பல் வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கி ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியது.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய நிலையில் அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த குற்றவாளிகளை கண்டறிந்து முதல் குற்றவாளியான கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+