சின்ராச இனி கைல பிடிக்க முடியாது.. படபடவென பறக்குது தங்கம்! இப்பவே வாங்கி குவிப்பது நல்லதா? கெட்டதா?
சென்னை: சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகளின் தாக்கத்தால் தங்கம் விலை உயர்வு தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் வர்த்தகம் நடைபெறும் MCX சந்தையில், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.60 லட்சத்தை கடந்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி வர்த்தக அமர்வின் தொடக்கத்தில் தங்கம் ரூ.1,60,049 என்ற அளவில் தொடங்கி, முந்தைய நாளை விட 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா? என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே உள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்து வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலைகடுமையாகச் சரிந்தாலும், சவரனுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் தான் இருக்கும் தற்போது பெரிய சரிவை சந்தித்து வருகிறது. ஆனால், திடீரென விலை அதிகரிப்பதும் தொடர்கிறது.
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்விலேயே உள்ளது. Comex வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் $5,182 அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 சதவீதம் உயர்வு பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை உயர்வு
இந்தியாவில் தர நிர்ணய விலையை வெளியிடும் இந்தியன் புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேசன் ( Indian Bullion Jewellers Association) 999 சுத்தத் தங்கத்தின் விலையை 10 கிராமுக்கு ₹1,55,066 என நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பீடு, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திரங்களுக்கான கணக்கீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. சந்தை நிலையைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று நாணய மாற்று விகிதம். இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 90.73 அளவுக்கு பலவீனமடைந்துள்ளது. உலக அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளாக தங்கத்தைத் தேர்வு செய்வதும் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான்
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் சந்தையில் அபாய உணர்வை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு 10 நாள் அவகாசம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வார இறுதியில் தங்கம் விலையில் திடீர் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல் சமரசம் ஏற்பட்டால் லாபப்பெறுதல் விற்பனை அதிகரிக்கலாம்; பதற்றம் அதிகரித்தால் விலை மேலும் உயரக்கூடும் என்பதே சந்தை மதிப்பீடு. முக்கிய நகரங்களில் தங்கம் விலை பெரும்பாலும் ஒரே நிலைமையில் காணப்படுகிறது. உள்ளூர் வரிகள், நகைக்கடை கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக மட்டும் சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன.
வெள்ளி விலை
சந்தை ஆய்வு அறிக்கைகள், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நாடியதால் தங்கம் விலை உயர்ந்ததாக குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் அமெரிக்க டாலரின் பலம் விலை நகர்வில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், வலுவான வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக வட்டி விகிதத்தில் உடனடி பெரிய குறைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு மாற்றமும் தங்கம் மற்றும் வெள்ளி விலை இயக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது.
என்ன செய்யலாம்?
சந்தைகள் தற்போது Federal Reserve கூட்டத் தீர்மானங்களின் குறிப்புகளை எதிர்நோக்குகின்றன. வட்டி விகிதத்தின் எதிர்கால திசை குறித்து தெளிவு கிடைத்தால், தங்கத்தின் அடுத்த கட்ட விலை நகர்வு தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் தங்கம் விலை $4,650 முதல் $5,100 வரையிலான வரம்பில் நிலைபெறக்கூடும் என்று சந்தை மதிப்பீடு தெரிவிக்கிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹1,47,000 முதல் ₹1,60,000 வரை ஆகும். எனவே, விலை உயர்ந்த தருணங்களில் விற்பனை செய்து, விலை குறையும் போது வாங்கும் அணுகுமுறை தற்போது ஏற்றதாக கருதப்படுகிறது.
உலக அரசியல் பதற்றம்
மொத்தத்தில், உலக அரசியல் பதற்றம், நாணய மாற்று நிலை மற்றும் வட்டி விகித எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம் விலை நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. அடுத்தடுத்த சர்வதேச முன்னேற்றங்கள் தங்க சந்தையின் திசையை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகின்றன. இதனால் தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மொத்தமாக வாங்குவதை தவிர்த்து, பகுதி பகுதியாக முதலீடு செய்வதே நலம் என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications