Today Gold Rate: இன்றும் உயர்ந்தது தங்கம் விலை! கிராம் 8 ஆயிரத்தை நெருங்குகிறது! நகை பிரியர்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. இதன் மூலம் நேற்று ஒரு சவரன் ரூபாய் 63,520 க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.63,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,940 க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று கிராமுக்கு ரூபாய் 30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.500 உயர்ந்தது. ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை இன்று குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

gold price Chennai gold

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. இதன் மூலம் நேற்று ஒரு சவரன் ரூ.63,520 க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.63,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,940 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூபாய் 30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிரம்பின் நடவடிக்கை

தங்கம் விலையானது தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை 70 ஆயிரத்தை எப்போது தொடுமோ என நகைபிரியர்கள் அச்சப்படும் அளவுக்கு விலையானது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச மார்க்கெட் விலை நிலவரப்படி தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது சர்வதேச அளவில் வர்த்தக சூழல் போன்றவை தங்கம் விலையை நிர்ணையிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்டு வரும் வரி விதிப்பு கொள்கையால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

64,000 என்ற புதிய உச்சம்

இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டை பல்வேறு நாடுகள் அதிகரித்துள்ளன. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலயில், கடந்த 11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.64,000 என்ற புதிய உச்சம் தொட்டது. ஆனால், அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,890க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,120க்கும் தங்கம் விலை விற்பனையானது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து குறையுமா? என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 50 உயர்ந்தது.

தங்கம் விலை இன்று ரூ.240 உயர்ந்தது

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,940க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 உயர்ந்தது. இதனால் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம்மின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையானது. ஏற்ற இறக்கமாக தங்கம் விலை இருந்து வரும் நிலையில் இன்றாவது விலை குறையுமா? என்று எதிர்பார்த்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.7,970க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை:

18.02.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025 - ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+