தங்கம் வாங்குற ஐடியா இருந்தால்.. தொடர்ந்து உயரும் விலைக்கு நடுவே.. நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: நடப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், "இது வெறும் தொடக்கம் தான் என்றும், இன்னும் உயர வேண்டிய இடத்துக்கு தங்கம் விலை செல்லவில்லை என்றும் விரைவில் ஒரு பவுன் தங்கம் 70 ஆயிரத்தை கடக்கும்" என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறினார்.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 22- ம் தேதி பவுன் ரூ.60 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.63 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 840-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 640 அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுன் ரூ. 64 ஆயிரத்து 480-க்கு விற்றது.அதேபோல் ஒரு கிராம் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ. 8 ஆயிரத்தை தாண்டியது.
கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 60-க்கு விற்றது. கடந்த 10 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ 2,160 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது ஏழை-நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு என்பது வெறும் தொடக்கம் தான். இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு பவுன் தங்கம் விலை 70 ஆயிரத்தை தாண்டும் என்று, நகை வியாபாரிகள் மற்றும் அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கூறப்படுவதாவது:
தங்கம் விலை இன்னும் உயரும். எந்த அளவுக்கு உயர வேண்டுமோ அதை இன்னும் தங்கம் விலை அடையவில்லை. எனவே இன்னும் தங்கம் விலை உயரும். கூடிய விரைவில் ஒரு பவுன் தங்கம் விலை 65 ஆயிரத்தை கடந்து செல்லும் அமெரிக்க அதிபரின் அறிவிப்புகள். அந்த அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் போது, தங்கம் விலை இன்னும் அதிகமாகும்.
பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். டிரம்பின் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரும். இந்த பொருளாதார மாற்றம் தங்கம் விலையில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்படும் இந்த சீரழிவினால், பொருளாதாரத்துறையை சார்ந்த முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையை சார்ந்தவர்கள் முதலீடு செய்ய தயங்குவார்கள்.
இதனால் அவர்களது முதலீடுகள் தங்கத்தின் மீது தான் இருக்கும். எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்தை தாண்டும். வர்த்தக போர் நடக்கும் சூழல் காரணமாக உலகத்தில் உள்ள பலரும் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே தங்கம் விலை மேலும் மேலும் உயரும். இது ஒரு தொடக்கம் தான், இனியும் தங்கம் விலை உயரத்தான் செய்யும்.
சுப முகூர்த்த தினங்களில் தங்கம் விலை அதிகரிக்கிறது என்பது எல்லாம் காரணம் அல்ல. இதற்கும் தங்கம் விலைக்கும் சம்பந்தம் இல்லை. தங்கம் விலையை நிர்ணயிக்கும் சக்தி இந்தியாவிடம் இல்லை. தங்கத்தின் மீது தான் முதலீடுகள் அதிகரிக்கும் என்பதால் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு குறைவு" என்று தெரிவித்தனர்.
-
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications