வரலாறு காணாத புதிய உச்சம்... மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை..!
சென்னை: இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 12480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 99 ஆயிரத்து 840க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், இன்று பிற்பகலில் 2வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.. லட்சத்தை கடந்துள்ள இந்த விலை உயர்வானது, பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. அதன்பிறகு தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா இடையோன பதற்றம், இந்தியாவிற்கு எதிரான வரி விதிப்பு, ரஷ்யா உக்ரைன் போர்,இஸ்ரேல் காசா போர், சீனா உடனான வர்த்தக போர், அமெரிக்காவின் வட்டி விகிதம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பங்கு சந்தையில் இருந்து முதலிட்டார்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவே தங்கம் விலை உயர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் பல்வேறு நாடுகள் தங்கத்தை வாங்கிகுவித்து வருகின்றன. ஜப்பான் போன்ற நாடுகளும் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகின்றன. பல்வேறு நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை, பொருளாதார ரீதியான பாதிப்பை தடுக்க தங்கத்தை புகலிடமாக கருதுவால் அதன் தேவை அதிகரித்துள்ளடன், விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
தங்கம் விலையை பொறுத்தவரை ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200 (ஒரு கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்று உயர்ந்து. அதன்பிறகு தினமும் 2000, 3000 என்று உயர தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தது ஆனால் அதன் விலையில் இடையில் சட்டென சரிவு ஏற்பட்டது விலை படிப்படியாக குறைந்து ஒரு பவுன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த நவம்பர் 5-ந் தேதி விற்பனை ஆனது. எனினும் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனையானது
கடந்த டிசம்பர் 15ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை ஒட்டுமொத்தமாக கிராமுக்கு 145 உயர்ந்து ஒரு கிராம் 12,515க்கு விற்பனையானது. ஒரு சவரன் டிசம்பர் 15ம் தேதி மாலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. அதேநேரம் டிசம்பர் 16ம் தேதி சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்து 98 ஆயிரத்து 800 ஆக விற்பனையானது.
கடந்த 17ம் தேதி சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 200 என்கிற அளவில் உயர்ந்த தங்கம், டிசம்பர் 18ம் தேதி சவரனுக்கு 320 ரூபாய் உயரந்து, 99 ஆயிரத்து 520 என்கிற அளவில் நேற்று விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 440 ஆக சென்னையில் விற்பனையானது. தங்கம் விலை டிசம்பர் 19ம் தேதியான நேற்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 99040 ஆக விற்பனையானது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 350க்கு விற்பனையானது. டிசம்பர் 20ம் தேதியான நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 160 ரூபாய் உயர்ந்து சவரன் 99 ஆயிரத்து 200க்கு சென்னையில் விற்பனையானது. இன்று ஒரு லட்சத்தை எட்டுமா அல்லது இன்னும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் விலை 12480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் இன்று உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி சென்னையில் இன்று 231 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி சென்னையில் இன்று 5 ஆயிரம் அதிகரித்து 2.31 லட்சமாக விற்பனையாகிறது.
பிற்பகலில் 2வது முறையாக உயர்ந்த தங்கம்
இன்று பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. இதன் மூலம் 15-ம் தேதிக்கு பின் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications