3100 மார்க்கை கிராஸ் செய்த தங்கம்.. சின்ன கோல்டு காயினாவது வாங்கி வைங்க.. ஏப்ரலில் விடாமல் உயரும்!
சென்னை: ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க விலையில் $3,100-ஐ தாண்டி உள்ளது. ஏப்ரலில் இந்த விலையை தங்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. மார்ச் கடைசி நாளிலேயே இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது. தற்போது இது 3104 டாலராக உள்ளது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை பவுன் ஆகும்.
இதன் மூலம் அடுத்த ஏப்ரல் மாதம் முழுக்க தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,65,574 ஆக உயர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகம் உயர்வது இதுவே முதல்முறை. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,191 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,425 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹6,950 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை உயர்வு
அமெரிக்காவில் வட்டியை நிர்ணயிக்கும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் வட்டி நிதி விகிதத்தை 4.25% முதல் 4.5% வரையிலான இலக்கு வரம்பிற்குள் வைப்பதாக அறிவித்தது. அதாவது தற்போது உள்ள வட்டி விகிதத்தை குறைக்கவோ, ஏற்றவோ இல்லை.
ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் ரெபோ ரேட் போலத்தான். இந்த வட்டி புள்ளிகள் குறைக்கப்பட்டால்.. கண்டிப்பாக டாலர் மதிப்பு சரியும். வரும் நாட்களில் இனி தொடர்ந்து டாலர் மதிப்பு சரியும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் அறிவித்து விட்டதால் இனி டாலர் விகிதம் சரிவை நோக்கியே செல்லும். இதனால் டாலர் மதிப்பு சரிவது உறுதியாகிவிட்டது. இதனால் தங்கத்தின் மதிப்பிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணக் கொள்கைகளால் பொருளாதார நிலையின்மை உண்டாகி உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக $3,100 (ரூ. 2.6 லட்சம்) மதிப்பைத் தாண்டி அங்கே விற்பனை ஆகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் சரியும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் பல கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர். முக்கியமாக ஏப்ரல் 2ம் தேதி வர்த்தக போர் உச்சம் அடைய உள்ளது. இந்தியா வரியை குறைக்க போவதாக தகவல்கள் வருகின்றன.. அப்படியே இந்தியா வரியை குறைத்தாலும்.. நாங்கள் இந்தியா மீது கண்டிப்பாக வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீதான கட்டணங்களை இந்தியர்கள் கணிசமாகக் குறைக்கப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதி, அவர்கள் எங்களிடம் இப்போது வசூலிக்கும் அதே கட்டணத்தை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம்.. அவர்கள் குறைத்தாலும் குறைக்கவிட்டாலும் நாங்கள் இந்தியாவை விட மாட்டோம்.. அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அளவிற்கு உயர்த்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம்.
இதனால் அதற்கு பின் தங்கம்தான் ஒரே பாதுகாப்பு என்பதால் பலரும் தங்கத்தை நோக்கி ஓடுவார்கள். இதனால் தங்கம் விலை ஏப்ரலில் இருந்து கடுமையாக உயரும்.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications