3% சரிவு.. எதிர்பார்க்காமல் சரிந்த தங்கத்தின் விலை.. தங்கத்தை விற்க போறீங்களா? இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் Multicommodity Exchange (MCX) இல் கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை 3% வரை குறைந்துள்ளது. டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தின் விலை சரிய தொடங்கி உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹9,797 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,980 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,385 ஆகவும் உள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால் , பலர் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பணத்தை சேமிப்பதை விட அதை தங்கமாக மாற்றி சேமிப்பதே சரியானது என்று பலரும் நினைக்கிறார்கள். இந்தியாவில் தங்கம் வெறும் முதலீடு மட்டுமல்லாமல், நல்ல நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தில் ஏற்படும் சரிவு, பணவீக்கம், உலக அரசியலில் உள்ள சிக்கல்கள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கின்றன.

Gold rate down more than 3 How to sell off the physical gold in the shop

தங்கத்தை விற்கும் போது ஏற்படும் சிரமங்கள்

தங்கம் விலை அவ்வப்போது மாறும் போது தங்கத்தை விற்க பலரும் நினைக்கலாம். ஆனால், தங்கத்தை விற்கும் போது மக்களுக்கு சில சிரமங்கள் உள்ளன. காரணம், தற்போதைய சந்தை விலைக்கு நகையை நகை கடைகள் வாங்குவதில்லை. பெரிய நகைக்கடைக்காரர்கள் தங்கத்தை வாங்கும்போது, விலையிலிருந்து ஒரு பகுதியை கழித்து விடுகிறார்கள். இதனால், தங்கத்தை விற்கும் நபர்கள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சில எளிய வழிகளை பின்பற்றினால் இந்த சிரமங்களை தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தை விற்கும் முறைகள்

இந்திய சந்தையில் தங்கத்தை எளிதாக விற்க சில விஷயங்களை கவனிக்க வேண்டும். தங்க நகை அல்லது தங்கக் கட்டி வைத்திருப்பவர்கள், அது BIS ஹால்மார்க் செய்யப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதற்கான ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும். வெளிப்படையான விலை கூறும் நகைக்கடைக்காரர்களை அணுகுவது நல்லது. அவர்கள் தினசரி சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் மதிப்பைச் சொல்வார்கள்.

தங்கத்தை நேரடியாக விற்காமல், வேறு வழிகளில் பணமாக்க விரும்புவோர் தங்கக் கடன் பெறலாம். பழைய நகைகளை விற்க விரும்புவோர் பில், KYC ஆவணங்கள் மற்றும் சுத்தமான தங்கத்துக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

நகைக்கடைக்காரர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

தங்கத்தை வாங்கும் போது நகைக்கடைக்காரர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும். முக்கியமாக KYC தொடர்பான பிரச்சனைகள் மற்றும் திருடப்பட்ட தங்கம் என்று சந்தேகம் வந்தால் பல சிக்கல்கள் உருவாகின்றன. ஹால்மார்க் இல்லாத நகையின் தரத்தை கண்டறிவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. மேலும், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் போது பான் கார்டு மற்றும் KYC ஆவணங்களை பெற வேண்டும் என்பதால் கூட சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தங்கத்தை விற்கும் போது ஏன் சிரமம்?

இந்தியாவில் தங்கத்தின் தரத்தை சரியாக பரிசோதிக்காததால் மற்றும் ஹால்மார்க் இல்லாததால் விலையில் வேறுபாடு வருகிறது. மேலும், பலர் செய் கூலி கழித்து விலை கூறுவதால் விற்பனை சந்தையில் தங்கத்தின் நம்பிக்கை குறைகிறது. எனவே தங்கத்தை விற்கும் போது கவனமாக நல்ல கடைகளில் விலையை சோதித்த பின் விற்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+