Gold Rate Today: ஏற்ற இறக்கத்துடன் நகை பிரியர்களை திணறடிக்கும் தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் அதிகரித்து வரும் தங்கம் விலையால் நகை பிரியர்கள், ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சத்தை தாண்டிவிடுமே என்றும் அச்சப்படுகிறார்கள். நேற்று அதிகரித்த தங்கம் விலை இனியாவது குறையுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.

நடப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நாள்தோறும் தங்கம் விலையானது புதுப் புது உச்சத்தை தொட்டு வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. ஆண்டு தொடங்கிய முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7,150-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57, 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold price Chennai gold

4 மாதங்களில் உயர்ந்த தங்கம் விலை

அதன்பிறகு 4 மாதங்களே முடிந்த நிலையில் தங்கம் விலையானது ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது 120 நாட்களுக்குள் 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு ஆண்டுக்கு கூட சராசரியாக 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மட்டுமே தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் 4 ஆண்டுகளில் உயரும் தங்கம் விலை 4 மாதத்தில் உயர்ந்துவிட்டதால் ஏழை, எளிய மக்கள் அதிர்ந்து போயினர்.

இடையில் ஒரு சில நாட்கள் விலை குறைந்தாலும், விலை ஏறும் நாட்களே அதிகமாக உள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழலை பொறுத்து தான் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் தான் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது. மேலும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் சூழல் உள்ளிட்டவையும் தங்கம் விலை உயர காரணமாக அமைந்தது.

இன்றைய ரேட் என்ன?

டிரம்ப் விதித்த வரி விதிப்பு, உக்ரைன் - ரஷ்யா போர், பல்வேறு நாடுகள் இடையே நீடிக்கும் போர்ப் பதற்றம் என தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. உலக பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம். இதனால் சவரன் ஒரு லட்சம் என்பது இந்த ஆண்டே நடந்தாலும் கூட வியப்பதற்கு இல்லை.

கடந்த மே 9 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,015 க்கும், ஒரு சவரன் ரூ.72,120 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. இதனால் நேற்று 10 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.72,360 க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 9,045க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 9,045க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 72,360க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை நிலவரம்:

10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360 (நேற்று)
09.05.2025 - ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 - ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025 - ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+