Gold Rate Today: தங்கம் விலை உயர்வு! சென்னையில் மீண்டும் ரூ 8 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் கோல்டு?
சென்னை: சென்னையில் பிப்ரவரி 14 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்ததால் ஒரு சவரன் தங்கம் ரூ 63,920-க்கு விற்பநை செய்யப்படுகிறது. அது போல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ 7990-க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 10 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ள அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை.
கடந்த ஆண்டு சவரன் 50 ஆயிரத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை, இந்த ஆண்டு 60 ஆயிரத்தில் இருந்தது. தற்போது 60 ஆயிரத்தை தாண்டி தங்கத்தின் விலை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. அந்த வகையில் தங்கம் விலை தற்போது 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் ரூ 8 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (பிப்.13) சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ரூ. 63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,980 ஆக உள்ளது. இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ 63,920-க்கும் ஒரு கிராம் ரூ 7990-க்கும் விற்பனையாகிறது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920












Click it and Unblock the Notifications