Gold Rate Today: தங்கம் விலை குறைந்தாலும் சென்னையில் வெறிச்சோடிக் கிடக்கும் நகைக் கடைகள்!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 10) ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 75,560-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,445-க்கு விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது 9 நாட்களுக்கு பின் குறைந்தாலும் சவரன் ரூ 75 ஆயிரத்தை தாண்டியதால் நகைக் கடைகளில் அந்த அளவுக்கு கூட்டத்தை பார்க்க முடியவில்லை என்றே சொல்கிறார்கள்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 9,445-க்கும், ஒரு சவரன் ரூ 75,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது, தற்போது கடந்த சில தினங்களாக அதிரடியாக அதிகரித்தது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200












Click it and Unblock the Notifications