Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ 1480 குறைவு! சென்னையில் கோல்டு வாங்கும் வாரமாகிடுச்சே!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 10) சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 71,560-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை சவரனுக்கு ரூ 1480 குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மாதம் அது போன்று எதுவும் நடக்கவில்லை.
ஜூன் 10 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,945-க்கும் ஒரு சவரன் ரூ 71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை மாறாமல் இருந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ 1200 குறைந்தது. அடுத்தது ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று மார்க்கெட் திறந்ததுமே சவரனுக்கு ரூ 200 குறைந்தது. அத்துடன் இன்று சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. அதாவது இதுவரை கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ 1480 குறைந்துள்ளது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160












Click it and Unblock the Notifications