Gold Rate Today: தங்கம் விலையில் சம்பவமே நாளைதான்! சென்னையில் இன்று என்ன ரேட்?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 1) ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 71,360-க்கு விற்பனையாகிறது. நாளை மார்க்கெட் திறந்தால் விலை எப்படியிருக்குமோ தெரியவில்லை.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மாதம் அது போன்று எதுவும் நடக்கவில்லை.
மே 1 ஆம் தேதி அன்று சவரன் ரூ 70,200-க்கு விற்பனையானது. ஜூன் 1 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 8,920-க்கும் ஒரு சவரன் ரூ 71,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 28ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480












Click it and Unblock the Notifications