Gold Rate Today: எகிறியடிக்கும் தங்கம் விலை! மார்க்கெட் திறந்ததுமே சென்னையில் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 21) சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 72,120-க்கு விற்பனையாகிறது. இன்று மார்க்கெட் திறந்ததுமே மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் தங்கம் விலை உயர்ந்துவிட்டது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.

ஏப்ரல் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ 68,080-க்கும் ஏப்ரல் 2ஆம் தேதி மாற்றமில்லாமல் அதே விலையிலும் நேற்றைய தினம் ரூ 68,480-க்கும் அதாவது சவரனுக்கு 400 உயர்ந்து விற்பனையானது.

ஏப்ரல் 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 72,120-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 9,015-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 தினங்களாக தங்கம் விலை மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 9 ஆயிரத்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ 72 ஆயிரத்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக மார்ச் 1ஆம் தேதி ரூ 63,520-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 31 ஆம் தேதி ரூ 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
19.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
18.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
17.04.2025- ஒரு சவரன் ரூ.71,360
16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160 (மாற்றமில்லை)
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+