Gold Rate Today: ஒரே நாளில் இரு முறை எகிறிய தங்கம் விலை! மனசாட்சியே இல்லாம இப்படி ஏறுதே!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 22) சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 82,880-க்கு விற்பனையான நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து சவரன் ரூ 83,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை ஏறியுள்ளது மக்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.
செப்டம்பர் 22 ஆம் தேதியான இன்று கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,360-க்கும், சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாலை நேரத்திலும் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 83440-க்கும் ஒரு கிராம் ரூ 10,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை 1120 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து கடந்த இரு தினங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் தாக்கத்தால் தங்கம் விலையில் மாற்றமா என தெரியவில்லை.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
22.09.2025- ஒரு சவரன் ரூ.83,440 (மாலை)
22.09.2025- ஒரு சவரன் ரூ.82,880 (காலை)
21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640












Click it and Unblock the Notifications