Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.2200 சரிவு.. சென்னையில் நேற்று ஏறிய அளவுக்கு இன்று குறைவு!
சென்னை: நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 2,200 உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. ஒரு சவரன் ரூ 74,320-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று தங்கம் விலை ரூபாய் 2200 குறைந்துள்ளது. நேற்று அதிகரித்த அதே அளவுக்கு இன்று விலை குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.
ஏப்ரல் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ 68,080-க்கு விற்பனையானது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதியான நேற்று சவரனுக்கு ரூ 2,200 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 74,320-க்கு விற்பனை ஆனது.
நேற்று புதிய உச்சம்
தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மிக அதிகமாக உயர்ந்து புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்றும் ஏற்றம் காணுமா? விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 2200 சரிவைக் கண்டுள்ளது. தங்கம் விலை நேற்று ரூ.2200 அதிகரித்த நிலையில் இன்று அதே அளவு சரிந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ஒரே நாளில் ரூபாய் 275 குறைந்து ரூ.9,015 க்கு விற்பனை ஆகிறது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை நிலவரம்
23.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
19.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
18.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
17.04.2025- ஒரு சவரன் ரூ.71,360
16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300 (காலை)
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080












Click it and Unblock the Notifications