Gold Rate Today: இடியை இறக்கிய தங்கம் விலை.. வரலாறு காணாத விலை உயர்வு.. 1 சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 27) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 85,120-க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,640-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 6 உயர்ந்து ஒரு கிராம் ரூ 159-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,59,000 ஆகும்.
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்கனவே 50 சதவீதம் வரி விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து, நேற்று மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியை விதித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் சமையல் பொருட்கள், கழிவறை பொருட்கள் என தொடர்ந்து பல்வேறு பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வரிகளால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது. செப்டம்பர் 26 ஆம் தேதியான நேற்று கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,550-க்கும், சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 84,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
செப்டம்பர் 27 ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ. 90 உயர்ந்து கிராம் 10,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் வரலாறு காணாத விலை உச்சம் தொட்டுள்ளது. அந்த வகையில், இன்று வெள்ளி விலை ரூ. 6 உயர்ந்து கிராம் ரூ. 150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
27.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120
26.09.2025- ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025- ஒரு சவரன் ரூ.84,080
24.09.2025- ஒரு சவரன் ரூ.84,800
23.09.2025- ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025- ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Rate: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ 5360 குறைவு! நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் -
தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம்












Click it and Unblock the Notifications