Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. 1 சவரன் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரத்தின் தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை, இரண்டாவது நாளான இன்றும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,760 விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 30) சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 86,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,61,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வந்தது.

gold rate gold rate today gold rate today in Chennai gold rate in Chennai gold price in Chennai gold rate news in tamil

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்தியப் பொருள்களின் இறக்குமதிக்கு 50 சதவீதம் வரி விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சமையல் பொருட்கள், கழிவறை பொருட்கள் என தொடர்ந்து பல்வேறு பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிகளால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது. செப்டம்பர் 26 ஆம் தேதியான நேற்று கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,550-க்கும், சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 84,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

செப்டம்பர் 27 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ. 90 உயர்ந்து கிராம் 10,640க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் வரலாறு காணாத விலை உச்சம் தொட்டுள்ளது. அந்த வகையில், வெள்ளி விலை ரூ. 6 உயர்ந்து கிராம் ரூ. 150 க்கு விற்பனை செய்யப்பட்டது. செப்டம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 10,640-க்கும், ஒரு சவரன் ரூ 85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

செப்டம்பர் 29 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 85,600க்கும், கிராமிற்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 1,000 உயந்து ரூ. 1,60,000க்கும், கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ. 160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 86,880க்கும், தங்கம் விலை கிராம் ரூ. 90 உயர்ந்து ரூ. 10,860க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோ ரூ. 1,000 உயர்ந்து ரூ. 1,61,000க்கும், வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 161க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

30.09.2025- ஒரு சவரன் ரூ. 86,880

29.09.2025- ஒரு சவரன் ரூ. 85,600

28.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120

27.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120

26.09.2025- ஒரு சவரன் ரூ.84,400

25.09.2025- ஒரு சவரன் ரூ.84,080

24.09.2025- ஒரு சவரன் ரூ.84,800

23.09.2025- ஒரு சவரன் ரூ.85,120

22.09.2025- ஒரு சவரன் ரூ.83,440

21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320

20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320

19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840

18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160

16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240

15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680

14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920

11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480

08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760

07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+