Gold Rate Today: அதிர வைக்கும் தங்கம் விலை! இன்று ஆடிப்பெருக்காச்சே! எப்படி நகை வாங்குவது?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 3) ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 74,320-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,290-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 123-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,23,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு கிராம் ரூ 9,290-க்கும், ஒரு சவரன் ரூ 74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் குறைந்து வந்தது, தற்போது திடீரென அதிரடியாக அதிகரித்தது. தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்திருந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக அதிகரித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் நகை வாங்கக் கூடும். ஆனால் நேற்று சவரன் விலை ரூ74 ஆயிரத்தை தாண்டிவிட்டதால் திங்கள்கிழமை மார்க்கெட் திறக்கும் வரை இதே விலையே இருக்கும் என்பதால் இன்று நகைக் கடைகளில் கூட்டம் சற்று குறைய வாய்ப்பிருக்கிறது.
இன்று ஆடிப்பெருக்கு என்பதால் இந்த நாளில் செய்யும் செயல்கள், வாங்கும் பொருட்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அதற்காக சிலர் தங்கம் வாங்கக் கூடும். ஆனால் இந்த விலை விற்பதால் நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி கூட வாங்க முடியாதே!
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
-
இனி தான் ஆட்டத்தை ஆரம்பிக்க போகுது தங்கம்.. சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்க போகும் முடிவு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications