Gold Rate: தங்கம் விலை இரட்டை அதிர்ச்சி! ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2560 உயர்வு!
சென்னை: சென்னையில் பிப்ரவரி 3-ஆம் தேதியான இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்த நிலையில் தற்போது பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு ரூ 1920 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 1,14,160 -க்கும், கிராமுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,270-க்கும் விற்பனையாகிறது.
அது போல் வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் பிற்பகலில் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,00,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 29-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400- க்கு விற்பனையானது.
சென்னையில் பிப்ரவரி 3-ஆம் தேதியான இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்த நிலையில் தற்போது பிற்பகலில் சவரனுக்கு ரூ 1920 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,14,160 -க்கும், கிராமுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,270-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2560 உயர்ந்துள்ளது.
அது போல் வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் பிற்பகலில் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,00,000-க்கும் விற்பனையாகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880
-
Gold Rate: ஈரான் போர் எதிரொலி! தங்கம் விலை கிடுகிடு! மாலை நல்ல செய்தி? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications