Gold Price: இன்று காலையில் குட்நியூஸ்.. மாலையில் இடியை இறக்கிய தங்கம் விலை.. கிடுகிடு உயர்வு
சென்னை: சென்னையில் ஜனவரி 3 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ 1,00,160-க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ 12,520-க்கும் விற்பனையான நிலையில் மாலையில் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. புத்தாண்டிலாவது விலை குறையுமா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உக்ரைன் ரஷ்யா விவகாரத்தால் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.

உலக நாடுகளின் பார்வை தங்கத்தின் மேல் குவிந்துள்ளதால் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது. புத்தாண்டையொட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜனவரி 2 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,00,640 -க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,580-க்கும் விற்பனையானது.
அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ 260-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,60,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்தாலும் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைத்தபாடில்லை
ஜனவரி 3 ஆம் தேதியான இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 1,00,160-க்கும், கிராமுக்கு ரூ. 60 குறைந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 256 க்கும், கிலோவுக்கு ரூ. 4 ஆயிரம் குறைந்து 1 கிலோ ரூ. 2,56,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இன்று மாலையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.480 குறைந்த தங்கம் விலை மாலையில் ரூ.640 அதிகரித்துள்ளது. அதன்படி இன்று மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,00,800 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,600க்கு விற்பனையாகிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
03.01.2026 - ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை நிலவரம்)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160
02.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,640
01.01.2026- ஒரு சவரன் ரூ 1,04,800
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications