Gold Rate Today: தங்கம் விலை இன்று தேவலை! நாளை மார்க்கெட் திறந்ததும் காத்திருக்கும் அதிர்ச்சி?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 4) ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் எந்த மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 70,040-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1,800 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
மே 4 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 8,755-க்கும் ஒரு சவரன் ரூ 70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
-
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications