Gold Rate Today: சென்னையில் எகிறிய தங்கம் விலை! மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கிராம்!
சென்னை: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் , மெக்சிகோ, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதித்துள்ள வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதால் இன்று முதல் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதற்கேற்ப தங்கம் விலை சவரனுக்கு ரூ560 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிப்ரவரி மாதம் முடிந்த போது தங்கத்தின் விலை சவரன் ரூ 63,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மார்ச் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இந்த நிலையில் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் மீது 25 சதவீத வரியையும் சீனா மீது 10 சதவீத வரியையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் இன்று முதல் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது ஒரு பவுனுக்கு ரூ 4000 வரை கூட இந்த ஆண்டு விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மார்ச் 2 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. அது போல் நேற்று மார்க்கெட் திறந்த பிறகும் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் (மார்ச் 4) சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 64,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 8010 -க்கு உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680












Click it and Unblock the Notifications