Gold Rate: வாரத்தின் கடைசி நாளில் தங்கம் விலை உயர்வு! மேலும் உயர வாய்ப்பு! வணிகர் சங்கம் ஷாக் தகவல்!
சென்னை: சென்னையில் பிப்ரவரி 7-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,15,360 -க்கும், கிராமுக்கு ரூ 170 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,420-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ 285-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,85,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 29-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400- க்கு விற்பனையானது.
சென்னையில் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,15,360 -க்கும், கிராமுக்கு ரூ 170 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,420-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ 285-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,85,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களில் சவரனுக்கு ரூ 6240 குறைந்த நிலையில் நேற்று மாலையும் இன்றும் சவரனுக்கு ரூ. 2400 உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தங்க நகை வணிகர் சங்கத் தலைவர் சாந்தகுமார் கூறுகையில், தங்கம் விலை மேலும் உயரக் கூடும். வெள்ளியின் விலையும் உயரும். எனவே வெள்ளியில் முதலீடு செய்ய முடிவு செய்தால் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
07.02.2026- ஒரு சவரன் ரூ.1,15,360
06.02.2026- ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026- ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications