Coimbatore Gold rate: 3 நாளில் சவரனுக்கு ரூ. 4000 எகிறிய தங்கம் விலை! கோவை, மதுரையில் அதிர்ச்சி
மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயமுத்தூரில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 11) சவரனுக்கு ரூ 1480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 69,960-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ 1 உயர்ந்து ரூ108-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ 4160 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் , பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.
தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் ஏப்ரல் 11ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1480 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 69,960-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,745-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ. 4,160 உயர்ந்துள்ளது.
கோவையிலும் மதுரையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,339-க்கும், ஒரு சவரன் விலை ரூ 74,712-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையில் 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 7,091-க்கும், ஒரு சவரன் விலை ரூ 56,728-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக மார்ச் 1ஆம் தேதி ரூ 63,520-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 31 ஆம் தேதி ரூ 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
இதனால் தங்கத்தின் விலை 38 சதவீதம் வரை குறையும் என அமெரிக்க பங்கு சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் கணித்திருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 4160 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080












Click it and Unblock the Notifications