ரூ.10,000 காலி.. தங்கத்தின் விலை தாறுமாறாக சரியும்! 12-15% கிராஷ் ஆகும்.. வல்லுனர்கள் பகீர் வார்னிங்
சென்னை: தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் 12-15% வரை குறைய வாய்ப்புள்ளதாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது என்று என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில், சில்லறை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ரூ.96,960 ஆக உள்ளது. இது ஜிஎஸ்டியுடன் சேர்த்து சுமார் ரூ.99,868 ஆக உயரும்.
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹9,917 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹9,090 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,480 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங்ஸ்டார் ஆய்வு குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 38% வரை குறையக்கூடும் என்று கணித்துள்ளார். மே 28 அன்று, சில்லறை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ரூ.96,960 ஆக இருந்தது. 3% ஜிஎஸ்டியுடன், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.99,868 ஆக இருந்தது.
தங்கத்தின் விலை உயர்வு நகை விற்பனையாளர்களைப் பாதித்துள்ளது. இந்தியாவின் பொற்கொல்லர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் (IBJA) கூற்றுப்படி, இந்தியாவில் தங்க நகை விற்பனை கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக 30% குறைந்து 1,600 கிலோவாக இருந்தது. தங்கத்தின் விலை சுமார் 5% வரை உயர்ந்துள்ளது. இதுவே விற்பனை குறைய காரணம்.

மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், அட்சய திருதியை நெருங்கிய நேரத்தில் தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்து மே 15 அன்று 10 கிராமுக்கு ரூ.92,365 ஆக இருந்தது. ஆனால், அதன்பிறகு தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது. இதனால் இப்போது தேவை குறைந்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம்
சமீபத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களே காரணம். குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் ஏற்பட்ட வர்த்தக மோதல்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதினர். ஆனால் இப்போது அந்த சூழல் இல்லை. வர்த்தக போர் முடியும் சூழல் உள்ளது. சர்வதேச பிரச்சனைகள் சரியாகும் சூழல் உள்ளது. இதனால் தற்போது பல காரணிகள் தங்கத்தின் விலையை குறைக்கலாம்.
கடந்த சில மாதங்களாக நிலவிய பிரச்சனைகள் இப்போது இல்லை. அந்த வர்த்தக பிரச்சனைகள் முடிவதால் டாலர் மதிப்பு உயரும். இதனால் தங்கத்தின் மதிப்பு தானாக சரியும். இப்போது தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் 12-15% வரை குறைய வாய்ப்புள்ளதாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது.
அதாவது 10 கிராம் தங்கத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறையலாம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் தங்கம் சரியும் போது அதை மக்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது என்று என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை செய்துள்ளது
-
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications