Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை!
சென்னை: 3 நாட்கள் சரிவுக்குப் பின் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்தது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,17,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 30 அதிகரித்து, ரூ.14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 12 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1.14 லட்சத்துக்கு விற்பனை ஆன நிலையில் திடீரென ஷாக் கொடுக்கும் விதமாக ஒரே நாளில் ரூ.9 ஆயிரம் அதிகரித்து ரூ. 1.23 லட்சத்திற்கு விற்பனையாகி பேரதிர்ச்சி கொடுத்தது. அதுவரை லேசான ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை அன்று ஒரே நாளில் உச்சம் தொட்டது.

தங்கம் விலை நிலவரம்
ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதன்கிழமை ஒரே நாளில் ஆபரணத் தங்கம் ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று விலை உயர்வு
இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. தங்கம் விலை நேற்று சவரன் ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,17,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 30 அதிகரித்து, ரூ.14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களில்
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040 (இன்று)
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000
-
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications