14 வருஷத்துக்கு முன்னாடி நடந்த அதே சம்பவம்.. சரியும் பவர் ஹவுஸ்.. தங்கம் விலை சரமாரியாக சரியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையின் பவர் ஹவுஸாக கருதப்படும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 3,683 அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலையை விட சுமார் 43% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் விலை உயர்வுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இது பாதுகாப்பற்ற முதலீடுகளைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது.

gold rate silver investment

தங்கம் விலை உயர காரணம்

குறிப்பாக ஆசியாவில் உள்ள பல மத்திய வங்கிகள், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக அதிக தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளன. மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் அமெரிக்கா - சீனா வர்த்தகப் பிரச்சினைகள், இந்தியா - அமெரிக்கா வர்த்தக போர் போன்ற உலகளாவிய பதட்டங்களும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருத வழிவகுக்கின்றன.

இருப்பினும், இந்த வேகமான விலை உயர்வு நீண்ட காலம் நீடிக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2011-ம் ஆண்டில் தங்கம் ஒரு உச்சத்தை எட்டியது. ஆனால், பின்னர் ஒரு பெரிய மற்றும் நீண்ட சரிவைக் கண்டது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 14 வருடங்களுக்கு முன் மிக அதிக விலை உயர்வை அடைந்தது.. பின்னர் மிக மோசமான சரிவை சந்தித்தது. அதேபோல் மீண்டும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது, சந்தைகள் வரவிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளை உன்னிப்பாகக் கவனிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), உற்பத்தி மற்றும் சேவைத் துறை அறிக்கைகள், பணவீக்கக் குறியீடு போன்ற தரவுகள் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா அல்லது சரியத் தொடங்குமா என்பதற்கான தெளிவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை சரியும்

வர்த்தக போர் காரணமாக தற்போது தங்கம் அதிகப்படியான விற்பனை நிலையில் உள்ளதால், குறுகிய காலத்தில் 5-6% சரிவைக் காணலாம்.. அதாவது அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்காத திடீர் சரிவு இருக்கும்.. பின்னர் 2026-ஆம் ஆண்டில் 4,200 டாலருக்கும் மேல் புதிய உச்சத்தை அடையலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 40% லாபம் ஈட்டியுள்ள தங்கம், 2024-ல் 27% உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 3,680 டாலராக வர்த்தகமானது. முன்னதாக இன்றைய அமர்வில் 3,689.27 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, வலுவான முதலீட்டுத் தேவை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாக 2026-ஆம் ஆண்டிலும் தங்கத்தின் ஏற்றம் தொடரும் என பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ஏற்றத்திற்கு முன்பாக கண்டிப்பாக ஏற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் விலை சுமார் 3,800 டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.

இந்த விலை உயர்வுக்குப் பிறகு ஒரு சாத்தியமான திருத்தத்தை நாம் காணலாம். அதாவது விலை சரிவு இருக்கும். அது கொஞ்சம் பெரிய சரிவாக இருக்கும். ஆனால், இது சந்தையில் நுழைய காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பாக அமையும். 2026-ல் தங்கம் 4,000 டாலருக்கும் மேல் உயரக்கூடும்" என்று நியூமன் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பாக அமையும். அப்போது தங்கம் வாங்கினால் அது அடுத்த ஆண்டில் கடுமையான பலனை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+