Gold Rate Today: 4வது நாளாக இன்றும் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.. இன்று சென்னையில் என்ன ரேட்?
சென்னை: சென்னையில் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ரூபாய் 5,400 உயர்ந்த நிலையில் இன்றும் விலை எகிறுமா? அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு தங்க நகை பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உலக பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இறக்கமாகக் காணப்பட்டு வருகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கம்
ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.1,05,600 என இருந்தது. 5 ஆம் தேதி திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வியாழக்கிழமையும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.
3 நாட்களில் அதிரடி உயர்வு
நேற்று காலையில் தங்கம் விலையில் மாற்றமின்றி முந்தைய நாள் விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று மாலை தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 அதிகரித்து, ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 5,400 உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் தொடர்ந்து உயருமா? அல்லது உயர்வு வேகத்தில் பிரேக் வருமா என நகைப்பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.65 உயர்ந்து ரூபாய் 1,3,965க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,200 (நேற்று)
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.


Click it and Unblock the Notifications
