Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold Rate Today) இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. நேற்றும் விலை குறைந்து இருந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது. இதேபோன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் சரிவதும், பின்னர் 3 நாட்கள் ஏறுவதுமாக இருந்து வருகிறது.

தங்கம் விலை உயர்வு
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா - இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவற்றால் பலரும் தங்கம் மீது முதலீடு செய்வதால் விலை சற்று அதிகரித்து வந்தது. ஈரான் அமெரிக்கா தாக்குதல் காரணமாகுவும் கடந்த வாரம் தங்கம் விலை சரமாரியாக உயர்ந்தது.
அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனை ஆனது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இன்றைய தங்கம் ரேட்
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ரூ.1,18,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ. 14,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன?
இதேபோன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக சரிந்து இருக்கிறது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ 290-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சரிந்து இருப்பது நகைப் ப்ரியர்கள் இடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்:
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080 (இன்று)
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200 (நேற்று)
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications