Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: இன்று 2 முறை மாற்றம் கண்ட தங்கம் விலை.. மீண்டும் “விர்ர்ர்”!.. நகை பிரியர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூபாய் 1,000 உயர்ந்திருந்த தங்கம் விலை இன்று காலை சரிவைக் கண்டது. தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை ரூ.320 உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தை சூழலுக்கு ஏற்ப, தங்கம் விலை அவ்வப்போது மாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே விர்ரென அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம் விலை.

Gold price Gold

தங்கம் விலை நிலவரம்

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ரூ.64,600 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது. கடந்த 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது.

பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ. 7940க்கு விற்பனை செய்யப்பட்டது.

மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும், மார்ச் 3 ஆம் தேதி திங்கட்கிழமையும் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, 5 நாட்களில் மட்டும் ரூ.1080 அளவுக்கு குறைந்தது.

தங்கம் விலை அதிகரிப்பு

இந்நிலையில், மார்ச் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 5) சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து 8,065க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் 2 முறை மாற்றம்

இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 7) காலை சவரனுக்கு ரூபாய் 360 சரிந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,160க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ45 குறைந்து ரூபாய் 8,020க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.106.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.260 குறைந்த நிலையில் தற்போது ரூ.320 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 மணி நேரத்தில் உயர்ந்ததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

06.03.2025 ஒரு சவரன் ரூ.64,480 (இன்று காலை ஒரு சவரன் ரூ.64,160க்கு விற்பனை ஆனது)
05.03.2025 ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025 ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025 ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025 ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025 ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025- ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025- ஒரு சவரன் ரூ.63,120

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+