Gold Rate Today: 4வது நாளாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. உச்சகட்ட குஷியில் நகைப் பிரியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. இன்றும் தங்கம் விலை குறையுமா அல்லது ஏறுமுகத்திற்கு திரும்புமா என்பது நகைப் பிரியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,080 என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை மாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம் விலை. ஜனவரி 31 ஆம் தேதி ஒரு சவரன் ஆபணரத் தங்கம் ரூ.61 ஆயிரத்தை தொட்டது.

Gold price Gold

அடுத்த நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.62 ஆயிரத்தைக் கடந்தது. இப்படியாக நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் விலை ரூ.64,480 ஆகவும், பிப்ரவரி 20 ஆம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது.

அதன் பின்னர் சற்று விலை குறைந்தாலும், பிப்.25 ஆம் தேதி மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. ரூ.64,600 ஆக உயர்ந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது.

கடந்த 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது. 24 காரட் தங்கம் விலை ரூ.69,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.920 அளவுக்கு குறைந்தது.

கடந்த 3 நாட்களாக் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் இன்று விலை மேலும் குறையுமா அல்லது, ஏறுமுகத்தை நோக்கித் திரும்புமா என்பதே நகைப் பிரியர்கள் அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம ரூ.20 குறைந்து ரூ.7,940க்கு விற்பனையாகிறது. 4வது நாளாக தொடர்ந்து தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை நிலவரம்:

01.03.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025 ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025 ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025 ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025- ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+