Gold Rate Today: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: போர் காரணங்களால் கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் என தங்கம் விலை போக்கு காட்டி வருகிறது. நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 குறைந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,000 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஈரான் போர் காரணமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் போர் முடிவுக்கு வந்துவிட்டதா டிரம்ப் அறிவித்தார். இரு வாரங்கள் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவிக்க ஈரானும் அதை உறுதி செய்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இதனால் டாலர் மதிப்பும் சரியவே தங்கம் விலை உயர ஆரம்பித்தது.

தங்கம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் ஆளில்லா விமானம் ஒன்று ஈரானின் லார் நகரின் மீது பறந்ததாகவும் அதை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியானது. இதை உறுதி செய்த ஈரான், தங்களது நவீன வான் பாதுகாப்பு அமைப்பு அந்த டிரோன்களை இடை மறித்து அழித்தாக தெரிவித்தது. மேலும், இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் ஈரான் அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை சரிவது நின்ற நிலையில், தங்கம் விலையும் உயர்வது நின்றது.
இந்நிலையில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 குறைந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,000 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இன்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சரிந்தது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,000க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. ஆயிரம் உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்து, ரூ.1,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 125 உயர்ந்து, ரூ.14,125க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
10.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,000 (இன்று)
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000 (நேற்று)
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)












Click it and Unblock the Notifications