Gold Rate Today: இன்று மொத்தமாக சரிந்த தங்கம் விலை.. காலையிலேயே வந்த இன்ப அதிர்ச்சி.. மக்கள் செம ஹேப்பி
சென்னை: வளைகுடா பகுதியில் அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அமெரிக்க வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் காரணமாகத் தங்கம் விலை மீண்டும் சரிவின் பாதைக்குத் திரும்பியுள்ளது. நேற்றைய தினம் தங்கம் விலை சரிந்த நிலையில், இன்றும் அது தொடர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து எகிறி வந்தது. வரலாறு காணாத அளவுக்கு கேப் விடாமல் தங்கம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் ஏழைகள் மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்களுக்கும் கூட தங்கம் என்பது எட்டாத ஒரு விஷயமாக மாறிப் போனது. இந்தாண்டும் கூட தொடக்கத்தில் சில வாரங்கள் தங்கம் விலை உச்சம் தொட்டது..

தங்கம் விலை
ஒரு கட்டத்தில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15,000ஐ கூட கடந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- ஈரான் இடையே போர் வெடித்தது. இந்த போர் காரணமாகத் தங்கம் விலை மேலும் உயரும் என அஞ்சப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. அதாவது இந்த போரால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அதன் விலையும் உயர்ந்தது. கச்சா எண்ணெய் எப்போதும் டாலரிலேயே வர்த்தகமாகும் நிலையில், இதனால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சரிந்தது.
அப்போது முதலே தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் இல்லாமல் குறைந்தே வருகிறது. அதாவது எப்போது எல்லாம் போர் நிறுத்தம் அமலுக்கு வருவது போல இருக்கிறதோ.. அப்போது எல்லாம் தங்கம் விலை ஏறும்.! நிலைமை மோசம் போர் தொடரும் என்பது போலத் தகவல் வந்தால் தங்கம் விலை சரியும். கடந்த சில வாரங்களாகவே இதே போக்கு தான் இருக்கிறது.
காரணம்
இப்போது ஹார்முஸில் நிலைமை மோசமாக உள்ள நிலையில், தற்போது போர் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. அத்தோடு அமெரிக்காவும் வட்டி விகிதம் தொடர்பாகத் தனது முடிவை இன்று அறிவிக்கிறது. இன்றைய தினம் வட்டி குறைப்பு இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொருளாதாரம் குறித்து அமெரிக்க மத்திய வங்கியின் கருத்தைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சரிந்தது.
இன்றைய தங்கம் விலை
இந்தியாவிலும் கூட அதுவே நடந்துள்ளது. நேற்றைய தினமே இந்தியாவில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், இன்றும் அது தொடர்ந்தது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை குறைந்தது.. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து, ரூ.13,950க்கு செய்யப்படுகிறது. மறுபுறம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்:
29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600
28.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
27.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,840
26.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600
25.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600
24.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
23.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,280
22.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,000
21.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560














Click it and Unblock the Notifications