Gold Rate Today: அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எதிர்பாராத ஏற்றம்.. இனிமேல் இப்படி தான்.. இன்று விலை என்ன?
சென்னை: தங்கம் விலையில் கடந்த ஒரு வாரமாகவே பெரியளவில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் அமெரிக்கா வட்டி விகிதம் தொடர்பாக மிக முக்கிய முடிவை எடுக்கப் போகிறது. அதைப் பொறுத்தே தங்கம் விலையில் வரும் நாட்களில் மாற்றம் இருக்கும். இன்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.240 உயர்ந்து. ரூ.96240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்தாண்டு மிக வேகமாக அதிகரித்துள்ளது அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் நடக்கும் மாற்றங்களே இதற்குப் பிரதானக் காரணமாக இருந்து வந்துள்ளது. டிரம்ப் அதிபரான உடனேயே தங்கம் விலை ஏறி நிலையில், அவர் உலக நாடுகள் மீது வரிகளை அறிவிக்க ஆரம்பித்தவுடனேயே உச்சம் தொட்டது. அதுவே இப்போது வரை தொடர்கிறது.

தங்கம்
இந்தச் சூழலில் தான் கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், இதன் காரணமாகவே தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. 2 நாட்களாக அங்கு பெடரல் வங்கி கூட்டம் நடந்த நிலையில், இந்திய நேரப்படி இன்றிரவு வட்டி விகிதம் குறித்து முடிவு வெளியாகிறது.
என்ன நடக்கும்
பொதுவாகவே வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் திரும்புவார்கள். அதேநேரம் வட்டி விகிதம் அதிகரிக்கும்போது தங்கம் விலை குறையும். தற்போதைய சூழலில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சிக்கல் இருப்பதால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது. அப்படி உயர்ந்தால் அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும்.
தங்கம் விலை
இந்தியாவில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் பிறகு ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. நேற்றைய தினம் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.96,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை
இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.240 உயர்ந்து. ரூ.96240க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து. ரூ.12,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 8 ரூபாய் உயர்ந்து ரூ.207க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ 2.07 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840












Click it and Unblock the Notifications