Gold Rate Today: தங்கம் விலை இன்று புதிய உச்சம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600 உயர்ந்தது! காரணம் டிரம்ப் போட்ட குண்டு
சென்னை: தங்கம் விலை நிற்காமல் தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. சர்வதேச அளவில் நடந்த சில பல மாற்றங்களால் தங்கம் விலை நிற்காமல் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்று அது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.2320 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600க்கு விற்பனையாகிறது.
கொரோனாவுக்கே பிறகே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இஎம்ஐ போட்டு தங்கம் வாங்கும் காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். அந்தளவுக்குத் தான் நிலைமை இருக்கிறது.

சர்வதேச சூழல்
இப்போதும் கூட சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தே வந்துள்ளது. இந்த முறையும் டிரம்ப் தான் காரணம். உக்ரைன் விவகாரத்தில் கேப் விட்டு இருக்கும் டிரம்ப், இப்போது கிரீன்லாந்து பக்கம் திரும்பியுள்ளார். கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா ஆக்கிரமிக்க வந்தால் அதை டென்மார்க்கால் (டென்மார்க்கின் ஒரு பகுதி தான் கிரீன்லாந்து) தடுக்க முடியாது. இதனால் அமெரிக்கா வசம் கிரீன்லாந்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே டிரம்ப் நிலைப்பாடு!
டிரம்ப்
இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது 10% வரியை டிரம்ப் அறிவித்தார். கிரீன்லாந்தை தரவில்லை என்றால் வரி உயரும் என மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் அது உக்ரைன் மீதான ரஷ்யாவின் செயல் சரி என்பது போல ஆகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும், டிரம்ப் விடுவது போலத் தெரியவில்லை. இதனால் சர்வதேச பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.
தங்கம் விலை
நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1360 உயர்ந்து, ரூ.1,07,600க்கு விற்பனையானது. அதாவது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நேற்றிரவு தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து, ரூ.1,08,880க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.13,610க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ரூ.330க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் உயர்வு
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக மாலையும் உயர்ந்தது. மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2320 உயர்ந்து, ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,900க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3600 அதிகரித்துள்ளது.. வெள்ளி விலையும் மாலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.340க்கு விற்பனையாகிறது.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை
20.01.2026 (மாலை) - ஒரு சவரன் ரூ.1,11,200
20.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.1,08,880
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications