Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: இனி தங்கம் விலையை நிறுத்தவே முடியாது.. ஒரேயடியாக எகிறிய தங்கம் விலை.. கதறும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இது மத்திய கிழக்கில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச மார்கெட்டிலும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகவே இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்து ரூ.1,26,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்தாண்டை போலவே இந்தாண்டும் கூட தொடக்கம் முதலே தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.99,520க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இப்போது இரண்டே மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.20 லட்சத்தை தொட்டுவிட்டது.

Gold Price

தங்கம் விலை

இடையில் பிப்ரவரி மாதம் தங்கம் விலையில் ஏற்றம் இல்லாமல் இருந்தது. புவிசார் அரசியல் சூழல்கள் அமைதியாக மாறியதாலும், எந்தவொரு சர்வதேச மோதல்களும் இல்லாததால் தங்கம் விலை நிலையாக இருந்தது. சில நாட்கள் தங்கம் விலை ஏறினாலும் கூட அது அப்போதே சரிந்துவிட்டதால் தங்கம் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது.

இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் தங்கம் விலை அப்படியே பெரியளவில் உயர்ந்தது. இதற்குப் பிரதான காரணமே மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல்.! கடந்த சில வாரமாகவே ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக டிரம்ப் மிரட்டி வந்தார். அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்பதே இதற்குக் காரணம். ஈரான் மீது பிரஷர் போடத் தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா சொல்லி வந்தது.

ஈரான் மோதல்

இந்தச் சூழலில் தான் நேற்று சனிக்கிழமை இஸ்ரேல் திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இதில் மிக மோசமான பாதிப்புகள் ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. ஈரானும் கூட இஸ்ரேல், அமீரகம் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே, அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பான இடங்களிலும் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை

இது மத்திய கிழக்கில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச மார்கெட்டிலும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்திருந்தது தங்கம் விலை.. இதற்கிடையே பிற்கபகளில் மீண்டும் ரூ.2,800 உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்தது. நேற்றைய தினம் ஆபரண தங்கம் சவரன் ரூ.1,24,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் ரூபாய் 15,500க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை

இன்று ஞாயிற்றுக்கிழமையும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் விலை உயராது. ஆனால், போர் பதற்றத்தால் இன்றைய தினமும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்து, ரூ.1,26,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ரூ.15,775க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.325க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நிலவரம்

1.03.2026 - ஒரு சவரன் 1,26,200 (இன்று)

28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (நேற்று பிற்பகல்)

28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (நேற்று காலை)

27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360

25.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,440

24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120

23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000

18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840

17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560

16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+