Gold Rate Today: ஒரேயடியாக சரியும் தங்கம் விலை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி! உடனே நகை கடைக்கு ஓடுங்க!
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திற்குத் திரும்பியது. கடந்த இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று இன்ப அதிர்ச்சி தரும் வகையில், தங்கம் விலை சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் தங்கம் விலை சரிந்துள்ளது.
நேற்று ஏப்ரல் 30ம் தேதி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1.6 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,615.50 டாலராக வர்த்தகமானது. அதாவது தங்கம் விலை 2வது மாதமாகச் சரிந்துள்ளது. பிப்ரவரி மாதம் வரை ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை. அதன் பிறகு தொடர்ச்சியாக இரு மாதங்கள் சரிந்துள்ளது. இது மக்களுக்குக் கொண்டாட்டம் தான்.

தங்கம்
இருப்பினும், இது ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. நேற்று வியாழன் மாலையே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஏற தொடங்கிவிட்டது. இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை உயர்வுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
காரணங்கள்
சரிந்த டாலர் மதிப்பு: ஜப்பான் அரசு தனது 'யென்' நாணயத்தின் மதிப்பைத் தக்கவைக்க இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தலையிட்டதால், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது. டாலர் மதிப்பு குறையும்போது, மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது எளிதாகிறது.. இது தேவையையும் விலையையும் உயர்த்துகிறது.
எண்ணெய் விலை நிதானம்: சர்வதேச கச்சா எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுவிட்டு, தற்போது சற்று குறைந்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது.
சர்வதேச சூழல்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம், உலக நாடுகளின் பொருளாதாரக் கணக்கீடுகளை மாற்றியமைத்துள்ளது. எரிசக்தி விலை உயர்வு காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் மத்திய வங்கிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று அறிவித்திருந்தாலும், பணவீக்கம் குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டன் மத்திய வங்கி, ஈரான் போரினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் மோசமானால் வட்டி விகிதங்களைக் கடுமையாக உயர்த்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
இதனால் குறுகிய காலத்தில் தங்கம் விலை சரிந்தாலும் கூட நீண்ட கால நோக்கில் தங்கம் விலை உயரவே செய்யும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அடுத்த 6 முதல் 12 மாதங்களில் தங்கம் 5,000 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொடும் எனச் சிட்டி வங்கி கணித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
நேற்றைய தினம் காலையில் தங்கம் விலை உயராத நிலையில், பிற்கபலில் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1600 உயர்ந்து, ரூ.1,12,800க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,100க்கு விற்பனையாகிறது. இன்று இந்தியாவிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் விலை சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,12,400க்கு விற்கப்படுகிறது.. அதாவது சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.14,050க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.265க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை
01.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,400
30.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,200 (மாலை)
29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600 (காலை)
28.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
27.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,840
26.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications