Gold Rate Today: தங்கம் விலையில் இன்ப அதிர்ச்சி.. ஒரே நாளில் சரிவு! துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
சென்னை: ஈரான் மோதலில் நேற்று வரை சமாதான புறாக்கள் பறந்த நிலையில், சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. ஆனால், இரவோடு இரவாக நிலைமை மொத்தமாக மாறியது. ஈரானின் அமைதி ஒப்பந்தத்தைத் திட்டவட்டமாக நிராகரித்த டிரம்ப், ஈரான் சொல்வதை ஏற்கவே முடியாது என சொன்னார். டிரம்ப் இதுபோல சொன்னவுடன் தங்கம் விலை சரிய ஆரம்பித்தது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த போர் மேகங்கள் இப்போது சற்று விலகத் தொடங்கியுள்ளன. இந்த போர் உலகெங்கும் மோசமான பாதிப்புகளை உருவாக்கியது. சர்வதேச மார்கெட்டில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தைப் பாதித்து இருந்தது. இந்தச் சூழலில் தான் நிலைமை மெல்ல மாற ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவின் சமாதான திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை அளிக்கத் தயாராகிவிட்ட நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், டாலரின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை குறைவதால் பணவீக்கம் கட்டுப்படும் என்றும், இதனால் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்றும் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் கணக்குப் போடுகிறார்கள். இதுவே தங்கத்தின் மீதான மோகத்தை அதிகரித்துள்ளது.
உலக பொருளாதாரம்
மற்றொரு பக்கம், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைமை மாற்றமும் இந்த விலையேற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவர் ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கெவின் வார்ஷ் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். கெவின் வார்ஷ் வந்தால் வட்டி விகிதத்தை வேகமாகக் குறைப்பார் என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஈரான் மோதலில் மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது. ஈரான் கொடுத்த அமைதி முன்மொழிவை டிரம்ப் நிராகரித்துள்ளார். இதன் காரணமாக சர்வதேச தங்க மார்கெட்டில் இரவோடு இரவாக நிலைமை மாறியது. ஈரானின் அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்த நிலையில், தங்கம் விலை சரிய ஆரம்பித்தது.
தங்கம் விலை
சென்னையில் சனிக்கிழமை ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,150 ரூபாயாக இருந்தது. அதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றம் இல்லை. இன்றைய தினம் என்ன ரேட் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
இன்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.14,100க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலவரம்
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000












Click it and Unblock the Notifications