Gold Rate Today: தங்கம் விலையில் திக் திக்.. "இந்த" ஒரு விஷயம் தான் முக்கியம்.. விலை மீண்டும் குறையுமா! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகச் சந்தையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள், உலகப் பொருளாதாரத்தையே உற்றுநோக்க வைத்துள்ளன. குறிப்பாக, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ச் சூழலில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய மாற்றமும் தங்கம் விலையை நேரடியாகவே பாதிக்கிறது. இன்றைய விலை எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் 1% க்கும் மேலாகச் சரிந்த தங்கம் விலை, பின்னர் ஈரான் விடுத்த புதிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவால் மீண்டும் சற்று ஏறியது.. போர் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பால் பணவீக்கம் குறித்த கவலைகள் ஓரளவு குறைந்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம்.

Gold Price Gold

சர்வதேச மார்கெட்

இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,613 டாலராக இருக்கிறது.. நேற்றைய தினம் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் விலை 4,559.48 டாலர் வரை கீழே சென்ற நிலையில் அதன் பிறகே ஓரளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த வாரம் தங்கம் விலை 1.7% சரிவைச் சந்தித்துள்ளது.

இது தொடர்பாக எவர்பேங்க் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் காஃப்னி கூறுகையில், "ஈரான் உடனான போர் முடிவுக்கு வருவது சந்தைக்கு நல்ல செய்தி. ஒருவேளை போர் முடிந்தால், அமெரிக்க பெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும். இது அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைத்து, தங்கத்தின் விலையை உயர்த்த வழிவகுக்கும்" என்கிறார். அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று குறைந்ததால், மற்ற நாட்டுப் பணத்தை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது முன்பை விடச் சற்று மலிவாகியுள்ளது.

சர்வதேச சூழல்

ஈரானின் அமைதித் திட்டச் செய்தியால் கச்சா எண்ணெய் விலை சற்று சரிந்தது. எரிபொருள் விலை காரணமாக உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகள் இன்னும் முழுமையாக மறையவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்க வாய்ப்புள்ளது. இது தங்கம் விலையை ஓரளவுக்குக் குறைக்கும்.

இப்படி தங்கம் விலை குறையவும் சரி, உயரவும் சரி பல்வேறு காரணங்கள் இருக்கவே செய்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. ஈரான் மோதல் முடிவை நோக்கிச் சென்றால் தங்கம் விலை சரிகிறது.. அதேநேரம் ஈரான் போர் தீவிரமடைவது போலத் தெரிந்தால் தங்கம் விலை சரிகிறது. ஈரான் போர் முடியும் வரை தங்கம் விலை இப்படியே இருக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்

தங்கம் விலை

நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து ரூ.14,000க்கு விற்பனையானது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை

03.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,400

02.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,000

01.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,360

30.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800

29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,200 (மாலை)

29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600 (காலை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+