Gold Rate Today: மொத்தமாக காலியான தங்கம் விலை.. மீண்டும் ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் சரிய போகுது!
சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போதும் அதே டிரெண்ட் தான் தொடர்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு, டாலர் மதிப்பு அதிகரிப்பது, அமெரிக்க பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருகிறது. இதற்கிடையே சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிகாலை, ஒரு அவுன்ஸ் 3,877.66 டாலராக இருந்தது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச விலை தங்கம் விலை கடந்த வாரம் சரிந்தது. இப்போது கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கம் விலை தொடர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

என்ன காரணம்
கடந்த வாரம் மட்டும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4.5 சதவீதம் சரிந்தது. அமெரிக்காவில் எதிர்பார்த்ததைவிட பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை நீண்ட காலத்துக்கு குறைக்காது என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். பணவீக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் கன்சாஸ் சிட்டி பெடரல் வங்கி தலைவர் ஜெஃப் ஷ்மிட் தெரிவித்துள்ளார். வேறு சில பொருளாதார வல்லுநர்களும் இதே கருத்தை கூறியிருந்தனர்.
அமெரிக்கா என்ன செய்யும்
இதனால் டிசம்பர் மாதமும் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவீதப் புள்ளிகள் உயர்த்துவதற்கு 92 சதவீத வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சில வல்லுநர்கள் 0.50% கூட உயர்த்தும் என சொல்கிறார்கள். எப்போதுமே வட்டி விகிதம் உயரும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறையும். இதுவே தங்கம் விலை தற்போது சரிய முக்கிய காரணமாக இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் டிசம்பர் மாதம் வரை தங்கம் விலை பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் போகும். டிசம்பரில் அமெரிக்கா என்ன முடிவை எடுக்க போகிறது என்பதை பொறுத்தே தங்கத்தின் டிரெண்ட் அமையும். வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டால் தங்கம் விலை கணிசமாக குறையும். 0.5% என்றால் மிக பெரியளவில் குறையும்.
தங்கம் விலை சரிவு
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் நிலையில், சென்னையிலும் ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 குறைந்து ரூ.12,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.600 சரிந்து ரூ.1,00,320க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,320
15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920
14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920
13-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,560
12-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,520
11-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,120
10-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,680
9-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,06,040
8-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,288
7-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,288
6-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,120


Click it and Unblock the Notifications
